கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை - டிஜிபி உத்தரவு..

 
dgp sylendra babu

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்ததை அடுத்து அதிரடி உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடலோர  கிராமத்தில் நேற்று முன் தினம் அமரன் என்பவர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த 16 பேர் வாங்கிக் குடித்துள்ளனர்.  அதன்பின்னர் அவர்கள் அனைவருக்குமே  வாந்தி , மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவருமே மரக்காணம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் என அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாவல் அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சாராயம்

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில்,  ஒரே இரவில் 22  சாராய வியாபாரிகள் 2 அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,   சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.    மதுக்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 7418846100 என்கிற எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.