5 வருஷத்துல இல்லாத அளவுக்கு கொலை குற்றம் குறைந்துவிட்டது- டிஜிபி பரபரப்பு தகவல்

 
MaheshKumarAggarwal

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போச்சுன்னு எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டுட்டு இருக்கிற நேரத்துல, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடியான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். 

Image

சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த கேள்விக்கு பதில் சொன்ன டிஜிபி, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த வருடம் தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக ஜனவரி முதல் நவம்பர் 15 வரை சராசரியா 1421 கொலை வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆனால் 2026-ல் இதுவரை 1306 கொலைகள் தான் பதிவாகி இருக்கிறது என கூறியிருக்கிறார். 

அவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் இதோ:

கொலை வழக்குகள் - கொள்ளைக்காக கொலை செய்யப்பட்டவை தவிர்த்து (ஜனவரி முதல் நவம்பர் 15 வரை)

- *2022: 1,484 வழக்குகள்
- *2023: 1,469 வழக்குகள்
- *2024: 1,383 வழக்குகள்
- *2025: 1,346 வழக்குகள்
- *2026: 1,306 வழக்குகள் (நவம்பர் 15 வரை)

அதாவது, கடந்த வருஷத்தை விட இந்த வருஷம் 40 வழக்குகள் குறைந்துவிட்டது. கடந்த 4 வருஷ சராசரியை விட 115 வழக்குகள் குறைந்துவிட்டது. இது தான் 5 வருஷத்துலயே மிகக் குறைவான எண்ணிக்கை. அது மட்டும் இல்லை, கொலை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறதுலயும் போலீஸ் அதிரடி காட்டி இருக்கிறதா டிஜிபி சொல்லியிருக்கிறார். 

2026-ல் அக்டோபர் வரை:
- சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்: 3,229 பேர்
- கைது செய்யப்பட்டவர்கள்: 3,077 பேர்
- கைது சதவீதம்: 95%