பக்தியா? அதிகாரத்தின் வெளிப்பாடா? நீதா அம்பானி செய்த காரியத்தால் வெடித்த சர்ச்சை!
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீதா அம்பானி கலந்துகொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், நீதா அம்பானி பிரசாதமாக வழங்கப்பட்ட மோதகத்தை ஒரு கடி கடித்த பிறகு, மீதியைத் தன் பக்கத்தில் இருக்கும் ஒரு குழந்தையிடம் கொடுக்க முயலுகிறார். ஆனால் அக்குழந்தை அதை வாங்க மறுத்ததால், அந்த மோதகத்தை அருகிலிருந்த ஊழியர் ஒருவரிடம் அவர் வழங்குகிறார். அதனை அந்த ஊழியர் மிகுந்த மரியாதையுடன் பெற்று, தன் கண்களில் ஒற்றிக்கொண்டு பிரசாதமாகச் சாப்பிடுகிறார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே இருவேறு கருத்துகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தரப்பினர் இந்தச் சம்பவத்தை பணக்காரர்களின் அதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வின் அடையாளமாக விமர்சிக்கின்றனர்; கடித்த உணவை ஊழியரிடம் நேரடியாகக் கொடுப்பதற்குப் பதிலாகப் பிரசாதத் தட்டில் வைத்திருக்கலாம் என்றும், தீவிர பணக்காரர்கள் மீது காட்டப்படும் "குருட்டுத்தனமான பக்தி" இதைக் காட்டுகிறது என்றும் கூறுகின்றனர். எனினும், மற்றொரு தரப்பினர் இது சமூக ஏற்றத்தாழ்வு அல்ல, ஆன்மீகக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று வாதிடுகின்றனர். இந்து சமய வழக்கப்படி இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதம் புனிதமானது என்றும், பெரியவர்களிடமிருந்து பெறப்படும் பிரசாதத்தை ஏற்றுக்கொள்வது ஆசியாகக் கருதப்படுமே தவிர அதை அவமானமாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
In New India, extreme wealth officially buys you Divine Status.
— D (@Deb_livnletliv) September 26, 2026
A little girl refuses to eat the modak Nita Ambani already bit into.
But adults? Absolute blind devotion.
A grown man eagerly takes the leftover, presses it to his eyes and eats it like holy prasad.🤯 pic.twitter.com/Jc5DtI5X2o

