வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு!

 
tn

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முருகனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

tiruchendur

அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிபேஷம், தீபாராதனை நடைபெறுகிறது.  பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர். 

tn
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் , பறவை காவடி, அழகு குத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.