திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை

 
திருச்செந்தூர் கோவிலில் ஒரு கோடிக்கும் மேல் காணிக்கை

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Thiruchendur beach is deserted | கடலில் புனித நீராட தடை; திருச்செந்தூர்  கடற்கரை வெறிச்சோடியது

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் காற்றின் வேகமும் அலையின் வேகமும் அதிகமாக உள்ளது. இதனால் கோவில் கடற்கரையில் பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் கோவிலில் அதிகமான பக்தர்கள் வந்துள்ளதால் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக வருவாய் துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படைகள் பிரிவு, தமிழக காவல்துறையினர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.