ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை!!

 
modi

தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து  இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவரை  அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

modi

அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்லும் மோடிக்காக  யாத்ரிநிவாஸ் எதிரே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பஞ்சக்கரை சாலை வழியாக காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி காலை 11 மணியிலிருந்து 12.40 மணி வரை சுவாமி தரிசனம் செய்வார் என்று தெரிவிப்பட்டுள்ளது.

srirangam
இந்நிலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. பிரதமர் வருகையையொட்டி, . கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. யாத்ரி நிவாஸ் முதல் ஸ்ரீரங்கம் கோயில் வரை 5 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.