நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!!

 
ttn

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் கந்தூரி விழா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கியது. ஜனவரி 17-ஆம் தேதி இந்த விழா நடைபெற உள்ள நிலையில் வருகிற 13-ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம், 14ஆம் தேதி சந்தனம் பூசும் விழா, 17ஆம் தேதி கொடி இறக்கம் ஆகியவை அடுத்தடுத்து நிகழவிருக்கின்றன. 

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்  கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்கள் இரு தவணை தடுப்பூசி  செலுத்திக்கொண்ட சான்றும்,  தர்காவின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

nagore

இன்னிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் , கொரோனா  அதிகரிப்பால் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 கந்தூரி விழாவில் பக்தர்கள் பங்கேற்க முற்றிலுமாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.  அதேசமயம் வழக்கமாக நடைபெறும் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

nagore

முன்னதாக நாகூர் தர்காவில் கந்தூரி விழாவில் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடியானது  சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது.  ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து  பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியை வரவேற்று .  பின்னர் தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு , வாணவேடிக்கை முழங்க தர்காவில் உள்ள ஐந்து மினராக்களிலும் கடந்த 4 ஆம் தேதி கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.