திருப்பதி செல்லும் பக்தர்கள் ஷாக்..! 15 நாட்கள் ரயில் சேவை ரத்து...!

 
1

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடி - திருப்பதி  இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 17 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது.  

திருப்பதியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயிலும், மறுமார்க்கத்தில் காட்பாட்டியில் இருந்து இரவு 7.25 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் முழுமையாக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதி - காட்பாடி மெமு ரயில் ஏப்ரல் 17,20, 24,27, 25,29, மே 1, ஜூன் 5 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயிலும் பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. அதன்படி,  ரயில் எண் (16854) விழுப்புரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுத் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில்  ரயில் எண் (16853) திருப்பதியில் இருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஏப்ரல் 18, 22, 25, 29,  மே 1, ஜூன் 5ஆம் தேதி பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  எனவே, பயணிகள் இதற்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாத தரிசன டிக்கெட் விவரம்

திருப்பதி தேவஸ்தான் ஏப்ரல் மாதம் கடைசியில் ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அதன்படி, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. அன்றைய தினம் மாலை 3 மணிக்கு திருப்பதி, திருமலையில் தங்குவதற்கான அறைகளை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாணி விஐபி தரிசன டிக்கெட் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியாகிறதுழ. ஏப்ரல் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்கள் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.