திருப்பதியில் குவியும் பக்தர்கள்- ஜூலை 15 வரை விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை, தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் அட்மிஷனுக்கு நுழைவு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து வந்தபடி உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 20 முதல் 25 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. எனவே இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்கும் ஏற்கனவே ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைக் தவீர்க்க திருப்பதி தினந்தோறும் இரவு 8 மணிக்கு வழங்கப்படுக் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்று அதில் உள்ள நேரத்திற்கு வரலாம். நேரடியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஒத்துழைத்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலையில் 40 ஆயிரம் பக்தர்களுக்கான அறைகள் மட்டுமே உள்ளது. எனவே கூட்ட்ம் அதிகமாக உள்ளதால் அனைத்து பக்தர்களும் திருமலையில் அறைகள் பெற முயற்சி மேற்கொள்ளமால் திருப்பதியில் தங்கி வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். அறைகள் கிடைக்காத பக்தர்கள் திருமலையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல்களில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


