சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்!!

 
tt

சிதம்பரம், நடராஜர் கோயிலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. ஆனி திருமஞ்சன விழாவில்  பக்தர்கள், கனகசபை மீது ஏறி நின்று  சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Chidambaram

கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், சட்டத்தை கையி்ல் எடுத்துக்கொண்டு யாரேனும் குறுக்கீடுகள் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யத் தடையில்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இன்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.