பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனத்திற்காக பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது..!

 
1

கோடை விடுமுறைக் காலங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர் மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டிருப்பதாகவும், அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுவதாகவும் தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.கோடைக்காலங்களில் வி.ஐ.பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.