பக்தர்கள் ஷாக்..! 10 நாட்கள் இருந்த சொர்க்கவாசல் தரிசனம் இனி 2 நாட்கள் மட்டுமே..!

 
1 1

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை பிரதட்சனம் செய்ய லட்ச கணக்கான பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு படை எடுப்பது வழக்கம். 

இந்நிலையில் திருமலை கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகிறது. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர். இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் எடுத்துள்ளது.