பக்தர்கள் ஷாக்..! பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு..!

 
11

பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு..

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக லட்டு, முறுக்கு, தினை மாவு, புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட பிரசாதங்கள்:

  • லட்டு
  • முறுக்கு
  • தினை மாவு
  • புளியோதரை
  • பொங்கல்

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் விலை நவ.1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிரசாதம் விற்பனை விலை உயர்வு; பழனி கோயிலில் லட்டு -ரூ.20, அதிரசம் -ரூ.20, முறுக்கு -ரூ.25 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. தேன் தினைமாவு - ரூ.15, சர்க்கரைப் பொங்கல் - ரூ.20, புளியோதரை - ரூ.20க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.