"தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை" - திண்டுக்கல் ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!!

 
palani

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

thaipusam

தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை  சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.  இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறையாக அப்போதைய அரசு அறிவித்தது. இந்தாண்டு தைப்பூச திருவிழா வருகிற ஜன 18 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

thaipusam

இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி  வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை பக்தர்கள் இன்றி கொடியேற்ற விழா நடைபெறும் என்றும் தைப்பூசத் திருவிழா 10 நாட்களும் மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.  அரசு அறிவித்துள்ளபடி 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி நடைபெறும் தெப்ப உற்சவத்திலும்  பக்தர்களுக்கு அனுமதி கிடையாதுஎன்றும் தைப்பூச திருவிழா முழுவதும் வலைத்தளம் யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.