சதுரகிரி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!

 
sathuragiri sathuragiri

சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க பௌர்ணமி, அமாவாசை, பிரதோ‌ஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

sathuragiri

இந்த சூழலில் கொரோனா  காரணமாக இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை புரிய கடந்த சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  கடந்த மாதம் செப் 18 ஆம் தேதி சனி பிரதோ‌ஷம், 20-ந் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள்  கோயிலுக்கு வருகை புரிய வேண்டுகோள் விடுத்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்தது. 

sathuragiri


இந்நிலையில் இரண்டரை  மாதங்களுக்குப் பின்பு பிரசித்திபெற்ற சதுரகிரி கோவிலில்  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய   அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.