திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

 
1

திருப்பதி ஏழுமலையான் பக்தர் ஒருவர் தனது நிறுவன பங்கின் 60% விற்று காணிக்கையாக வழங்கவுள்ளார்.

தான் தொடங்கும் தொழில் வெற்றி அடைய வேண்டுமென்று ஏழுமலையானிடம் வேண்டி, ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கிய பக்தர் ஒருவர், சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.இதனால், தன்னுடைய நிறுவனத்தின் 60% பங்குகளை விற்பனை செய்து 121 கிலோ தங்கத்தை வாங்கும் அவர் அந்த தங்கத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறார்.தனது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்று கிடைத்த 7 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு தொகையை தங்கமாக திருப்பதி ஏழுமலையானுக்கு தரவுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் அந்த தொழிலதிபர் யார் என முதல்வர் தெரிவிக்கவில்லை. ஏழுமலையானுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்களின் எடை 120 கிலோ என்றும் அந்த தொழிலதிபர் அதை விட ஒரு கிலோ அதிகமாக தர உள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அந்த பக்தருக்கு தனது பெயரை வெளியில் சொல்ல விருப்பம் இல்லாததால் அவருடைய பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். அத்துடன் திருப்பதி கோயிலில் ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இதனை அறிந்த அந்த பக்தர் அதைவிட கூடுதலாக 121 கிலோ தங்கத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக கொடுக்க இருக்கிறார். அந்த பக்தர் கணிக்கையாக வழங்க இருக்கும் தங்கத்தின் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் என்று ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு கூறி இருக்கிறார்.