"கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்" – நூல் வெளியீடு!

 
mano mano

இணையம் வழியாக தமிழ் மொழியை உலகெங்கும், பறை சாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் மாறி வரும் சூழலுக்கேற்ப, கல்வியில் புதுமையை புகுத்தும் வண்ணமாக தமிழ் சார்ந்த மென்பொருள்களை உருவாக்கி பொது பயன்பாட்டிற்கு இலவசமாக அளித்து வருகிறது.  மேலும் கணினியில் தமிழை உட்புகுத்தி கணினி சார்ந்த எண்ணற்ற பணிகளை மேற்கொள்ளும் வண்ணம்,  மாணவர்கள் ,ஆராய்ச்சியாளர்கள் ,ஆசிரியர்கள் ,பொறியியல் கணினி சார்ந்த பேராசிரியர்கள் ,வல்லுனர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களை கொண்டு தமிழ் இணைய கல்விக் கழகத்தில் நடத்தப்பட்ட கணினி தமிழ் வளர்ச்சியும் ச,வால்களும் என்ற இணைய மாநாட்டின் மூலம் பெறப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்னாட்டு தரத்துடன் கூடிய இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

tn govt

புத்தகங்களை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வெளியிட்டார் . இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குனர் முனைவர் ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வில் தமிழகத் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் , தமிழ் மொழியின் பயன்பாட்டை பிற மொழியாளர்யிடம் பரப்பவும் பழந்தமிழ் நூல்களை தமிழில் பலரும் எளிதில் படித்து அறியவும், அறிவியல் முதலான பிற துறை அறிவை தமிழில் வழங்கவும் ,கணினி தமிழ் பெரிதும் பயன்படுகிறது எனவும், மொழியை கணினியின் ஊடாக பொதுவான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும்போது, வளர்ந்து வரும் சமூக மேம்பாடு அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

mano

அத்துடன் இன்றைய கால சூழலில் இணையம் வழியாக கற்கும் மாணவர்களின் மனநிலையை அறிந்து தொழில்நுட்பத்தின் மூலம் கற்றலில் ,புதுமையை ஏற்படுத்தவும், புதிய தலைமுறையினர் பன்முக நோக்கில் ஆராய்வதற்கு, ஏதுவாக செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை உருவாக்குவதற்கும் கணினித்தமிழ் பெரிதும் துணை புரிகிறது. கணினி தமிழ் வளர்ச்சியும் சவால்களும் என்ற இணைய வழி புத்தகங்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள் ,ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் www.tamilvu.org என்ற இணையதளத்தில் மின் புத்தகமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இப்புத்தகத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.