தேவா, வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்- 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 
வடிவேலு

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வடிவேலு, இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்: காவல் துறையில்  புகார் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு | Anna University VC said strict  action will ...

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சினிமா பிரபலங்களான இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேல் உள்ளிட்ட  பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம்  காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை கடந்த நவம்பர் மாதமே அந்த அமைப்பு வாடகைக்கு கேட்டனர். விருது விழா எனக் கேட்டதால் டீன் அந்த இடத்தை கொடுத்தார்.” எனக் கூறினார்.