"நாங்க பத்திரமா இருக்கோம்”- நேபாளத்தில் இருந்து தேச மங்கையர்கரசி வீடியோ வெளியீடு
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
"கைலாஷ் யாத்திரை சென்ற 150 பேரும் பத்திரமாக உள்ளோம்"
— Petti Kadai Media (@PettiKadaimedia) August 27, 2026
வீடியோ வெளியிட்ட ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி#NepalFlood #Nepal #PettiKadaiMedia pic.twitter.com/rlnleOkzAX
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். சாகா எனும் இடத்தில் 150 பேரும் பத்திரமாக இருப்பதாக தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் உள்ளோம். போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்ப நேபாளம், சீனா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் உதவி கேட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
நேபாளத்தில் மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 160 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 750 பேரை காணவில்லை என்றும், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சென்றவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என அவர்களது உறவினர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

