தடம் புரண்ட விரைவு ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

 
ttn

தர்மபுரி மாவட்டத்தில் ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் ரயில் தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயில் 3:30 அளவில் தர்மபுரி வந்தடைந்தது. சேலத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டரில் உள்ள வனப்பகுதியில் தண்டவாளத்தில் அருகிலிருந்த கற்களில் உரசியதால் இன்ஜின் மற்றும் அதற்கு அடுத்த மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதை சரி செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் ரயிலில் இருந்த பயணிகளுக்கு பாதிப்பில்லை என்று ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ttn

பெட்டிகளில் திடீரென பாறாங்கற்கள் விழுந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். ரயிலில் இருந்த 2348 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.  உயிர்சேதம் காயம் எதுவும் இல்லை;  மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு விரைந்து பின்பக்க 7 பெட்டிகளின் பாதுகாப்பில்லாத பகுதி,  பயணிகளுடன் சேலம் நோக்கி நகர்ந்து,  சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூர் வந்து சென்றது.  இது தொப்பூரில் நிறுத்தப்பட்டது. பயணிகளின் வசதிக்காக தொப்பூரில் இருந்து 15 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு , விபத்து நடந்த இடத்தில் 5  பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மூன்று பெட்டிகளின் முன் பகுதி தர்மபுரிக்கு மாற்றப்படுகிறது.  தர்மபுரி ,சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது என்றும்  ரயில்வே துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.