கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

 
udhayanidhi Stalin

மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம். எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மகளிர் உரிமைத்தொகைக்கு புதியதாக விண்ணபித்தவர்களுக்கு  3 மாதங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம். திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறினார்.