தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!

 
udhayanidhi Stalin

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அரசு சேவைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வட்டாட்சியர் அலுவலகங்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். 


வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை - வாக்காளர் அட்டை - நில அளவை - வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்குவது போன்ற மக்களுக்கான சேவைகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்ற பொதுமக்களை கனிவோடு நடத்தி, அவர்களுக்கான சேவைகளை நிறைவேற்றித் தந்திட வலியுறுத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.