துணை முதல்வர் பதவி.. அறிவிப்பு வந்தால் பார்க்கலாம் - உதயநிதி ஸ்டாலின்..

 
உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்றும், துணை முதல்வர் குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

நேற்றைய தினம் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற நிலையில், வரும் 28 ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது!  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்றவாறு பொதுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  

துணை முதல்வர் பதவி.. அறிவிப்பு வந்தால் பார்க்கலாம் - உதயநிதி ஸ்டாலின்..  

இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வெ.வேலு, பொன்முடி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,  துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திமுகவின் தேர்தல் இலக்கு , பவள விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோக்கப்பட்டதாக தவகல்கள் வெளியாகியுள்ளன. 

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேர்தல் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “துணை முதல்வர் குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். எப்போதும் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம். அறிவிப்பு வந்தால் பார்க்கலாம்.  விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியது நல்ல விஷயம். தமிழ்நாட்டில் யாரும் பெரியாரை மீறி, பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.