சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

 
Udhayanidhi

எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என குறிப்பிட்டுள்ளார்.