துணை முதலமைச்சரின் செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்

 
உதயநிதி ஸ்டாலின்

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏற்கனவே அமைச்சர்வையில் இருந்த 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு புதிதாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அந்தவகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  

இந்நிலையில் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கோபாலை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.