புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா?

 
புயல்

நவம்பர் மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அதேபோல மாதத்தின் மத்தியில் அடுத்ததாக உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் பெரிய சேதாரம் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே கனமழை பெய்தது. இச்சூழலில் தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மையம் கண்டுள்ளது.

May be an image of map and sky

அதன் காரணமாக நாளை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் உருவாகும் நான்காவது புயல் சின்னம் இதுவாகும்.  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையே கரையைக் கடக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நிவர்' புயல் பெயர் ஏன்? எப்படி?... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும்  பெயர் ரெடி! | nakkheeran

இருந்தாலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் (நவம்பர் 25) முதல் தமிழ்நாடு முழுவதிலும் மிக கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். அதேபோல நவ.26, 27 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.