வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி மறுப்பு - செய்தியாளர்கள் வாக்குவாதம்..

 
ஈரோடு இடைத்தேர்தல்  முடிவு


ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் , செய்தியாளர்கள் வலியுறுத்தினர்.   ஆனால்  அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  இதுவரை  2 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் தற்போது வரை முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. இதனால்  ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை அறிவிக்க அதிகாரிகள் தாமதிப்பதால், செய்தியாளர்களை  உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.  

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி மறுப்பு  - செய்தியாளர்கள் வாக்குவாதம்..

ஆனால் காவல்துறை தரப்பில்  வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால், செய்தியாளர்கள்  போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   அப்போது,  2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் இதுவரை வேட்பாளர்கள் பெற்ற அதிகாரபூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை எனவும் செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தினார். மதியத்திற்குள்ளாக   ஈரோடு கிழக்கு தொகுதி முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்று முடிவே இன்னும் அறிவிக்கப்படாததால் 15 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட மாலை ஆகும் என்று கூறப்படுகிறது.