டெங்கு, எலிக்காய்ச்சல்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
தேங்கும் மழைநீர், வெள்ளப்பெருக்கு, சுகாதாரமற்ற சூழல் ஆகியவை டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேங்கும் மழைநீர், வெள்ளப்பெருக்கு, சுகாதாரமற்ற சூழல் ஆகியவை டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். பயன்படுத்தப்படாத டயர்கள், தேங்காய் ஓடுகள், பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை வாரந்தோறும் சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும். கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதுடன், முழுக்கை ஆடைகளை அணிய வேண்டும்.
பாதுகாப்பான காலணிகள் இன்றி வெள்ளநீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள காயங்களை மூடி வைக்க வேண்டும். உதவிக்கு அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகலாம். சென்னை மாநகராட்சி உதவி எண்: 1913" என்ற எண்ணுக்கு அழைப்பு விடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

