திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை சித்ரவதை செய்த விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டனர். பட்டியலின பெண்ணை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதி வீட்டில் வேலை செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி வேண்டி மாண்புமிகு "புரட்சித்தமிழர்" எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். pic.twitter.com/xymdAWgEHF
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) February 1, 2024
இந்நிலையில் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதமிழகம் முழுவதும் அஇஅதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.