“ஜனநாயகன்”... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போ..? எங்கே தெரியுமா..?

 
1

தமிழ் சினிமா எதிர்பார்த்த ’ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்காததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு கட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது. இதனால் படத்தில் வசூல் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், முதல் வார இறுதியில் ஜனநாயகன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

'ஜனநாயகன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.321 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.