இ.பி.எஸ் மகனுக்கு அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் பதவி என கோரிக்கை - ராஜ்சத்யன் எதிர்ப்பு
சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது அதிமுக ஐடி விங் செயலாளராக இபிஎஸ் மகன் மிதுன் நியமிக்கப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமை அன்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
அரசியலில் அல்லாதவர்களை ,
— Raj Satyen (@satyenaiadmk) June 15, 2026
கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து ,
கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது.
அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது…
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன், “அரசியலில் அல்லாதவர்களை, கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து, கழகத்திற்கு எதிரான ஒரு Narrative Set செய்யப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்… இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

