டெல்டா விவசாயிகளே உஷார்! அக்டோபர் 15 வரை காத்திருக்காதீங்க... வெதர்மேன் ஹேமச்சந்தர் விட்ட அவசர எச்சரிக்கை!

 
1

டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், " தென்மேற்கு பருவமழை அடுத்த 10 நாட்களில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் விலகுகிறது.

தமிழ்நாட்டில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலும், இயல்பிற்கு அதிக வெப்பமும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் முறிவின் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை தொடரும், இரண்டாவது வாரம் முதல் உள் மாவட்டங்களில் இரவு நேர மழையின் பரப்பளவு படிப்படியாக அதிகரிக்கும்.

காவிரி டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்காமல் தண்ணீர் வைக்க ஏற்ற சூழல் இருந்தால் தண்ணீரை வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக அக்ட் 15 வரை தான் மழைப்பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு அதனால் ஒரு தண்ணீர் வைத்து பயிரை வளர்த்தெடுக்க முயற்சியுங்கள்.

மேட்டூரில் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் நீர் பெருக்கு கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காவிரி டெல்டா மட்டுமல்லாது அனைத்து மாவட்ட அனைத்து விவசாயிகளும் அக்டோபர் 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பயிர்களுக்கும், தென்னை போன்ற மரங்களுக்கும் ஒரு தண்ணீர் வைத்துவிடுங்கள்.

வறட்சியை போக்க வருகிறது வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 க்கு பின் நிலை கண்டிப்பாக மாறும்" இவ்வாறு ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.