டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

 
1

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் சிறப்பான தரமான போட்டியில் CSK – DC அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர் .

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது . சிறப்பாக விளையாடிய வார்னர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ரிஷப் பந்த் ஆரம்பம் முதல் அதிரடியை காட்டி வந்தார் . மறுபுறம் பொறுப்புடன் ஆடி வந்த பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த பக்கம் சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு டெல்லி அணி 191 ரன்கள் எடுத்தது .இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து வந்த ரஹானே 45 ரன்களும், மிட்செல் 34 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தோனி களத்துக்குள் நுழைந்தார். பின்னர் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் என ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டின போதிலும் சென்னை அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 16 பந்துகளில் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.