நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி தீ விபத்து - ஈபிஎஸ் இரங்கல்!!

 
eps

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உடல் கருகி பலியாகினர். அத்துடன் 40ற்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் இந்த தீ விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  டெல்லி தீ விபத்தில்  உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,  காயமுற்றோருக்கு  தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். 

tn

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி வணிகவளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 


முன்னதாக டெல்லி  தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ,மத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள் , காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.