இரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்

 
tn

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.  

EPS
இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி தொடர்பான புகார் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த மனு மீது இன்று பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

Ops

தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த  2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருவது கவனிக்கத்தக்கது.