தலைநகர் டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

 
1

.தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார்; தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசுகிறார். பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களுக்கு, நிதி வழங்கக் கோரி, கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார். நாளை சென்னை திரும்புகிறார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.