முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக கடிதம்

சனாதனம் குறித்த கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு டெல்லி பாஜக கடிதம் எழுதியுள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு டெல்லியில் தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி மூலம் டெல்லி பாரதிய ஜனதா கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் சனாதனம் தொடர்பான தனது கருத்துக்களை அமைச்சர் உதயநிதி திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால் இதற்குப் பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம் என்று டெல்லி பாஜக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இக்கடிதமானது டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச் தேவா தலைமையில் மூத்த தலைவர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.