சாலை அமைக்கும் பணியில் தாமதம் - 9 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்

 
corporation

சாலை அமைக்கும் பணிகளை தாமதமாக மேற்கொண்ட 9 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி நிர்வாகம்,  குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தலைமையேற்றார் . புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும்,  ஒப்பந்தம்  நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

road

இந்நிலையில் சென்னையில் தண்டையார்பேட்டை, பெரம்பூர் ,ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை தாமதமாக மேற்கொண்ட 9 ஒப்பந்ததாரர்களுக்கு ₹42.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  சென்னை மாநகராட்சி சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் சென்னை மாநகராட்சி இவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது

chennai corporation

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.