கன்னிகைபேரில் அமோனியா வாயு அகற்றும் பணியில் தொய்வு
Updated: Jul 5, 2026, 12:39 IST1783235398040
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரில் அமோனியா வாயு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே 18 உயிர்களை பலிகொண்ட வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து, அமோனியா வாயுவை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்றுவருகிறது. நேற்று மட்டும் சுமார் 2 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது.
ஆலையில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை அகற்றி டேங்கர் லாரிக்கு மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. பைப்புகளில் உள்ள அமோனியாவை அகற்றும் பணி நடைபெற்றுவரும் நிலையில், தரைக்காற்று வேகமாக வீசிவருவதால் வாயுவை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தகவல் கூறியுள்ளார். 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

