முதல்வர் குறித்து அவதூறு- நீதிமன்றத்தில் சிவி சண்முகம் ஆஜர்

 
cv shanmugam

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரையும் தமிழக அரசையும் அவதூறாக பேசிய வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியதை தொடர்ந்து வழக்கு விசாரனையை ஜீன் 24ஆம் தேதிக்கு நீதிபதி ராதிகா ஒத்திவைத்தார்.

cv

விழுப்புரம் நகர பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கடந்த ஆண்டு ஜீலை மாதம் 2023 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தமிழக அரசையும் தமிழக முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதே போன்று ஆரோவில் பகுதியில் கடந்த ஆண்டு 2023 மே 10 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும், முதலமைச்சராக தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக திமுக வழக்கறிஞர் சுப்பிரமணியம் வழக்கு தொடுத்திருந்தார். மொத்தமாக உள்ள மூன்று வழக்குகளிலும் ஏற்கனவே 5 முறைக்கு மேல் சிவி சண்முகம் ஆஜராகிய நிலையில் மீண்டும் இன்று சிவி சண்முகம் ஆஜராகினார். இவ்வழக்கில் சி.வி சண்முகத்திற்கு ஆதரவாக ஆஜராகிய வழக்கறிஞர்கள் ராதிகா தமிழரசன் ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்குகளில் தடை பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா இவ்வழக்கு விசாரனையை வருகின்ற ஜீன் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.