சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

 
ச் ச்

சீமான் மீது முன்னாள் திருச்சி டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டுனர் இது குறித்து நடவடிக்கை கோரி திருச்சி மாவட்ட  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் திருச்சி மாவட்டம் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். வருண்குமார் தொடர்ந்த இந்த அவதூறு வழக்கு திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.


இந்நிலையில், வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க  கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளைகள்  சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்  விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்டோரியா கௌரி, சீமான் மீது வருண்குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.