அவதூறு வழக்கு - அக்.9ல் சி.வி.சண்முகம் ஆஜராக உத்தரவு

 
cv shanmugam

தமிழ்நாடு அரசை அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
 

CV Shanmugam

கடந்த மார்ச் 7-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
cv shanmugam

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரையும், அரசையும் அவதூறாக பேசிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், அக்டோபர் 9ம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.