அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு- 3 பேர் மீது வழக்குப் பதிவு
Jul 15, 2026, 21:06 IST1784129812532
பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பழனியில் கோயில் மடத்தின் நிலத்தை தனி நபர்கள் இருவர் மீது பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், பத்திரப்பதிவு செய்யப்பட்ட தனிநபர்கள் இருவரும், அறநிலையத்துறை அமைச்சரின் உறவினர்கள் என வதந்தி பரப்பப்பட்டது. இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரில் இந்திராணி, பூர்ணிமா, வினோத் சூர்யா மூவர் மீதும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவது, அமைதியை குலைக்கும் செயல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

