வாய்ஸ் ஆப் வேளச்சேரி போல 234 தொகுதிகளுக்கும் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் - அமைச்சர் குமார்..!

 
1

சட்டசபையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் குமார் பேசியதாவது:

'வாய்ஸ் ஆப் பெரம்பூர், வாய்ஸ் ஆப் வேளச்சேரி என, இரண்டு தொகுதிகளுக்கு, பிரத்யேக ஏ.ஐ., செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குடிநீர், மின்சாரம், சாலை என, எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை அரசின் கவனத்திற்கு பொதுமக்கள் எடுத்து செல்லலாம்.இதற்கு, எழுதப் படிக்க, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. தமிழில் மொழியில் இயல்பாக பேசினால் போதும்.

'ஏஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு, அந்த குரலை புரிந்து கொண்டு, தொடர்புடைய துறையை அடையாளம் கண்டு, தேவையான விபரங்களுடன், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்.

இதுபோல், 234 தொகுதிகளுக்கும் பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என தெரிவித்தார்.புகார் தெரிவித்ததும், அதற்கு ஒரு எண் கொடுக்கப்படும். அதன் வாயிலாக, புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிய முடியும் என்றும் கூறினார்.