கழன்று சென்ற மின்சார ரயில் பெட்டிகள் - ரயில் சேவை பாதிப்பு

 
ttn

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

train

சென்னை கடற்கரை செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் சைதாப்பேட்டையில் நின்று புறப்பட்டபோது 8 பெட்டிகள் கழன்று  பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  கழன்று  சென்ற பெட்டிகளை ரயிலுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இதனால் ரயில் சேவையில் பாதிப்படைந்தது.

train

கடந்த 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவிர்த்து வந்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை கொண்டு வந்தனர். இந்த சூழலில் ரயிலிலிருந்து திடீரென கழன்ற பெட்டிகள் அங்கிருந்து இழுத்துச்சென்றதால், தாம்பரம் சென்னை மார்க்கமாக 20 நிமிட தாமதத்திற்குப் பிறகு மின்சார ரயில்கள் புறப்பட்டுச் சென்றது.