சென்னையில் சொத்துவரி திருத்தம் உடனடி நிறுத்தம்

 
chennai corporation

 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி), நகரில் குறைவாக மதிப்பிடப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்து வரி மதிப்பீடுகளைத் திருத்தி ஆய்வு செய்திருந்தது. இந்தத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல குறைதீர்ப்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.பொதுமக்களால் எழுப்பப்பட்ட வரித் திருத்தம் மற்றும் அது தொடர்பான குறைகளை கவனமாகப் பரிசீலித்த பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி, வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. வரித் திருத்தத்திற்கு முன்பு இருந்த தொகைக்கு வரித் தொகை திருப்பிச் செலுத்தப்படும். இந்தத் திருத்தப்பட்ட வரித் தொகையைச் செலுத்திய வரி செலுத்துவோருக்கு, அந்தத் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கு முன்கூட்டி வரியாகச் சரிசெய்யப்படும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.