டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் குறைக்க முடிவு- அடுத்த மிக முக்கிய அறிவிப்பு

 
ச்

டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் குறைக்க தவெக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் முதல் வாரம் மேலும் 750 டாஸ்மாக் ககடைகள் தமிழகத்தில் மூடப்பட இருக்கிறது. வரும் மாதத்தில் இருந்து தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் சாராயக் கடைகளும் குறைந்தது 2 மணி நேரம் குறைக்கப்பட இருக்கிறது. தற்போது டாஸ்மார்க் கடை மதியம் 12 மணிமுதல் இரவு பத்து மணி வரை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு இணங்க, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் – 4,765, அதில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ள கடைகள் – 717

🔹 வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் – 276 கடைகள்
🔹 கல்வி நிறுவனங்களுக்கு அருகில் – 186 கடைகள்
🔹 பேருந்து நிலையங்களுக்கு அருகில் – 255 கடைகள்

500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள கடைகள் ஆய்வு செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 717 கடைகள் மூடப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மக்களின் நலனே முதன்மை” என்ற அணுகுமுறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.