மின் கட்டண கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

 
eb bill

மின் கட்டண கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் கட்டண கணக்கீட்டு பணிகளை 6 மாத காலம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்க தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன. இதனால் மின் கணக்கீட்டு குளறுபடிகளும், தாமதங்களும் மின் கட்டணம் அதிகரித்ததாக ஏற்கனவே புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆகையால் மின் கட்டண கணக்கீட்டு பணியை தனியாரிடம் ஒப்படைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு லிமிடெட் டெண்டர் முறையில் நிறுவனங்களுக்கு மின் கணக்கீடு பணி தரப்படுகிறது.