கடன் தொல்லையால் தாயும், மகனும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

 
suicide

குமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் தொல்லையால் தாயும், மகனும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

 suicide

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்த தங்கராஜ்(65), இவரது மனைவி அமுதாராணி இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். மகன் மெல்பின்ராஜ்(23), கேரளாவில் பாதிரியார் படித்துவந்தார். மகளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அப்போது, மகள் திருமண செலவிற்காக வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 லட்சம் கடன் பெற்றதாகவும், மேலும் தெரிந்த நபர்களிடமிருந்து ரூ 8 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் கடன் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தங்கராஜ் கூலி வேலைக்கு சென்றுவரும் சொட்ப வருமானத்தில் கடனை அடைக்கமுடியாமல் கடன் தொல்லையால் தங்கராஜ் குடும்பத்தினர் மிகுந்த மனவருத்தத்தில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துவந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை தங்கராஜ் எழுந்து பார்க்கும்போது அமுதாராணி அவரது மகன் மெல்பின்ராஜ் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவி,மகனை மீட்டு பத்மநாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, அவர்களை பரிசோதித்த மருத்துவர் அமுதாராணி அவரது மகன் மெல்பின்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தாயும் மகனும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.