கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

Marakanam 3 People Died After Drinking Fake Liquor Two Police Inspectors  Suspended | கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர்கள் 2  பேர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை வாங்கிக் குடித்த அந்த கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் முதலில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தனர்.

அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜமூர்த்தி (55) என்பவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து 60 வயது மூதாட்டி மலர்விழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.